சாம்பார் ருசியாக .....
பருப்பு சாதத்திற்கு. பருப்பை வேக வைக்கும்போதே, முருங்கை காயின் நடுவில் உள்ள சதை பகுதியையும் எடுத்து வேக வைத்து, சாதத்துடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்
துவரம்பருப்பை வேக வைக்கும்போது சிறிது தேங்காய் துண்டை நறுக்கி போட்டால் பருப்பு விரைவில் வெந்து பக்குவமாக இருக்கும்.
சாம்பார் பொடிஅரைக்கும்போது அதில் ஒருகைப்பிடி அளவு கல் உப்பு சேர்த்து அரைத்தால் பூச்சிகள் வராது.
சாம்பார் புளித்தால் சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவை உடனே சரியாகிவிடும்.
பருப்பு வேக வைக்கும் போது பருப்புடன் சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.
0
Leave a Reply